தமிழர்களின் எழுத்தறிவு பெற்ற தொன்மை நாகரீகங்களை கீழடி வெளிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் வரலாறுகள் புதைந்து கிடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள அறந்தாங்கி தாலுகாவில் உள்ள மங்களநாடு வடக்கு - மாத்தூர் ராமசாமிபுரம் - தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்கள் இணையும் வில்வன்னி ஆற்றங்கரையில் சுமார் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ள அம்பலத்திடலில் கடந்த 15 ஆண்டுகளாக கருப்பு சிவப்பு பானை ஓடுகள் முதுமக்கள் தாழிகள், தாழிக்குள் எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/55b58df2-9239-4a45-9516-ea79bf17d926.jpg)
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் ஆய்வில் அந்த பானைகளில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடுகள் காணப்பட்டதையும் இதே குறியீடுகள் இலங்கை, கிரேக்கத்திலும் காணப்படுவதால் பறந்துவிரிந்த நாகரீக மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்றனர். தொடர்ந்து நடந்த மேலாய்வில் சுடுசெங்கல் கட்டுமானம் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கற்கால கற்கோடாரியும் கண்டெடுக்கப்பட்டு அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபுவிடமும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து பாதுகாத்து வந்த கருப்பு, சிவப்பு பானை குடுவைகளை மங்களநாடு வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனிடமும் ஒப்படைத்தனர். இவையெல்லாம் மங்களநாடு வடக்கு கிராம எல்லையில் கண்டெடுக்கப்பட்டது. இவற்றை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் அகழாய்வு செய்ய பரிந்துரை செயவதாகவும் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6a0d1552-f586-4d6d-acee-76fcbfd84620.jpg)
இந்த நிலையில் மங்களநாடு வடக்கு பகுதி ஆலங்குடி தொகுதிக்குள் வருவதால் அந்தப் பகுதியில் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை வெளிக் கொண்டு வரவும், தமிழர்களின் தொன்மையை வரலாறாக்கவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாகாஅகழாய்வு செய்ய வேண்டும் என்றார் மெய்யநாதன் எம் எல் ஏ. விரைவில் அகழாய்வு செய்தால் தமிழர்களின் வரலாற்றை அறியலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)